Header Ads

அமெரிக்காவில் படிக்க விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு...! மற்றவர்களுக்கும் பகிரவும்

அமெரிக்காவில் படிப்பது அனைவருக்கும் கனவாக இருந்தாலும் பொருளாதாரம் மற்றும் விசா பிரச்சனைகளால் அது சற்று கடினமாகவே உள்ளது.

அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு அதற்கென சிறப்பு ஆங்கில திறனுக்கான தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று இருப்பது கட்டாயமாகும்.

அமெரிக்காவில் பயில விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர் இத்தேர்வுகளில் கட்டாயம் வெற்றி பெற்று இருக்கவேண்டும்.
தகுதிகள்

அமெரிக்காவில் பயிலுவதற்காக மாணவர்களுக்கு இரு விதமான விசாக்கள் வழங்கப்படுகின்றது.
F-1 விசா

பொதுவாக கல்வி பயிலவரும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் விசாவாகும். நீங்கள் தேர்ந்தெடுத்து விண்ணப்பித்து இருக்கும் பள்ளி அல்லது கல்லூரிகளில் இருந்து அனுமதி வழங்கப்பட்ட பின்னர் இந்த விசாவானது வழங்கப்படும்.


பள்ளி கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு TOFEL, GMAT போன்ற ஆங்கில திறனாய்வு தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி அடைந்து இருக்க வேண்டும்.
M-1 விசா

கல்விக்காக அல்லாது வேறு ஏதேனும் பயிற்சி போன்றவற்றிற்காக வரும் மாணவர்களுக்கு இந்த விசாவானது வழங்கப்படுகின்றது.
கல்வி வரம்பு

அமெரிக்காவில் மாணவர்கள் உயர்கல்வி பயிலுவதற்காக அனுமதிக்கப்பட்டே விசா வழங்கப்படுகின்றது.

அந்நாட்டு சட்டத்தின் படி ஆரம்பக்கல்விக்காக மாணவர்கள் அங்கு அனுமதிக்கப்படுவது இல்லை. மாணவர்களுக்காக வழங்கப்படும் இந்த F-1 விசாவானது 12 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

ஆனால் A, E, F-2, G, H-4, J-2, L-2, M-2 போன்ற விசாவினை கொண்டவர்கள் அல்லது குடியுரிமையற்றவர்கள் ஆரம்ப கல்வி மற்றும் உயர்நிலை கல்வி ஆகிய இரண்டினையும் பயிலலாம்.

விண்ணபிப்பதற்கான விதிகள்

  • F மற்றும் M விசாவிற்காக ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் DS-160 விண்ணப்பத்தினை சமர்பிக்கவேண்டும்.
  • இதற்கு முன்னர் கடந்த ஆறு மாதங்களுக்குள்ளாக விண்ணப்பிக்கும் நபர் அமெரிக்காவிற்கு சென்று வந்து இருக்கக்கூடாது. அப்படி வந்து இருந்தால் அதற்கான காரணத்தினை சமர்பிக்கவேண்டும்.
  • உங்கள் பாஸ்போர்ட்டுடன் மற்றொரு நபரை இணைத்தால் அவருக்கு தனியாக விசாவிற்கு விண்ணப்பித்து இருப்பது கட்டாயம்.
  • இந்த விண்ணப்பத்திற்கான கட்டணம் 160 டொலராகும். இந்த கட்டணம் திருப்பி தரமாட்டாது. தேர்ந்தெடுத்து இருக்கும் பள்ளி அல்லது கல்லூரியே இதற்கான அனுமதியினை வழங்கும்.
விண்ணப்பிக்கும் முறை
  • Nonimmigrant Visa Electronic Application (DS-160) Form- ஐ ஆன்லைன் முறையில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவேண்டும். பின்னர் அதற்கான கட்டணமான 160 டொலரை செலுத்த வேண்டும்.
  • இந்த விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் எண், கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் பத்து இலக்கத்தில் உள்ள DS-160 விண்ணப்பத்தின் Barcode எண் ஆகியவற்றினை இணைக்கவேண்டும்.
  • பின் அமெரிக்கா தூதரகத்திற்கு விசா நேர்காணலுக்கான உங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாளில் செல்லவேண்டும். அப்போது பாஸ்போர்ட், விசாவிற்கான விண்ணப்பம், தற்போதைய புகைப்படம் மற்றும் பழைய பாஸ்போர்ட்களையும் கொண்டு செல்லவேண்டும்.
மற்ற விதிகள்

  • விசாவிற்கான நேர்காணலின் போது அமெரிக்கா தூதரகத்தின் அதிகாரி ஒவ்வொருக்கும் தனித்தனியாக அவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பார்.
  • பொய்யான சான்றிதழ்களை சமர்பித்தால் அந்நாட்டிற்கு செல்வதற்கே தடைவிதிக்கப்படும்.
  • குடும்பத்தின் பொருளாதார நிலை மற்றும் அங்கு கல்வியினை தொடரவிரும்புவதற்கான காரணம் போன்றவற்றிற்கான சான்றுகளை கட்டாயம் கொடுக்க வேண்டும்.
  • வங்கியில் கடனுதவி பெற்று கல்வியினை தொடர போவதாக இருந்தால் அதற்கான சான்றுகளை சரியாக சமர்பிக்கவேண்டும். இல்லையெனில் உங்களுக்கு பண உதவி செய்பவரினை பற்றி தகவல்களை சரியாக குறிப்பிடவேண்டும்.
  • மற்ற கல்வி சான்றிதழ் மற்றும் ஆங்கில திறனாய்வு தேர்வில் தேர்ச்சி அடைந்தமைக்கான சான்று போன்றவற்றினை கட்டாயம் சமர்பிக்கவேண்டும்.
  • உங்களுடன் வரும் கணவர் அல்லது குழந்தைக்கு derivative visa பெற்றிருப்பது அவசியம். F அல்லது M விசாவினை உடையவர்களுடைய பெற்றோர்க்கு derivative visa அவசியமில்லை.
  • உடன்வரும் கணவர் அல்லது 21 வயதிற்கு மேற்பட்ட குழந்தை அங்குள்ள ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரிவதாக இருந்தால் அவர்கள் அந்நிறுவனத்தின் வேலை பார்ப்பவர்களுக்கான விசாவினை பெற்றிருப்பது கட்டாயம்.
  • கணவர் அல்லது குழந்தையுடன் செல்பவர்கள் திருமண சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழை சமர்பிக்கவேண்டும்.
மேலும் விசா குறித்த சந்தேகங்களை தீர்த்து கொள்வதற்கு இலங்கையிலுள்ள அமெரிக்கா தூதரகத்தினை தொடர்பு கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.