யாழில் அதிர்ச்சி சம்பவம்!! தந்தையின் கொடூரத்தால் மகள் பலி
யாழ்ப்பாணம், அளவெட்டி மத்தியில் பெற்ற மகளை தீ மூட்டி எரித்துக் கொன்ற தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தந்தையால் தீ மூட்டப்பட்டு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒருவர் ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ் அளவெட்டி மத்திப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் திருவளங்கன் ஜனனி என்ற 27 வயது யுவதி பரிதாபகரமாக உயிரிழந்தாள்.
குறித்த யுவதி கடந்த ஒருவார காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தொல்லை தரும் தனது தந்தையை திருத்துவதற்காக ஜனனி முயன்றுள்ளார்.
இருந்தும் அவர் திருந்தாத காரணத்தால் தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்போது ஜனனியின் தாயார் தனது மகளை கட்டிப் பிடித்துக் காப்பாற்றி ” உன்னால் தான் நான் உயிர் வாழ்கின்றேன்” என கத்தியுள்ளார்.
இதனால் ஜனனி தற்கொலை முயற்சியைக் கைவிட்டு பெற்றோலை கழுவுவதற்காக குளிப்பதற்கு கிணற்றடிக்குச் சென்ற போது ”நீ இவ்வளவுக்கு துணிந்து விட்டாயா?” என கூறிக் கொண்டு ஜனனியின் உடலில் தந்தை தீக் குச்சியைக் கொழுத்தி எறிந்துள்ளார்.
உடனடியாக ஜனனியின் உடல் தீப் பிடித்து எரிந்துள்ளார். தாயார் கத்திச் சென்று அதை அணைக்க முற்பட்டும் பயனளிக்கவில்லை.
அங்கு கூடிய அயலவர்கள் ஜனனியின் உடலில் பிடித்த தீயை ஒருவாறு அனைத்து யுவதியை தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஜனனி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தற்போது தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
No comments