15 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கும், காணாமல் போனவர்களுக்கும்.. :ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை
அடுத்த மாதம் முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
உத்தேச இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை அமுல்படுத்தும் வரையில், இந்த ஸ்மார்ட் அடையாள அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஸ்மார்ட் அடையாள அட்டையை அறிமுகம் செய்ய ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த ஸ்மார்ட் அடையாள அட்டை அறிமுகத்துடன், 1972ம் ஆண்டு முதல் இதுவரையில் புழக்கத்தில் உள்ள லெமினேடிங் செய்யப்பட்ட தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் முறைமை ரத்தாகும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பதினைந்து வயதை பூர்த்தி செய்தவர்களுக்கும், அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியவர்களுக்கும், காணாமல் போனவர்களுக்கும் இவ்வாறு புதிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
பழைய இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தி கடந்த 45 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் தேசிய அடையாள அட்டைகளில் காணப்படும் சில குறைபாடுகளைப் பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த பழைய முறைமை தற்காலத்தில் எந்த வகையிலும் பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments