Header Ads

விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்த பெக்கி விட்சனுக்கு ட்ரம்ப் வாழ்த்து



534 நாட்கள் விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்த பெக்கி விட்சனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர், அங்கு சென்று விண்வெளி வீரர்கள் தங்கி கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விண்வெளி ஆய்வகத்தில் பெக்கி விட்சன் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார்.

இவர் அங்கு 534 நாட்கள் 2 மணி 48 நிமிடங்கள் தங்கி பணியாற்றியுள்ளார்.

இதன் மூலம் விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கிய ‘நாசா’ வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார்.

மேலும் விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்த அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகளின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு நாசா விஞ்ஞானிகள் ஜெப்ரீ வில்லியம்ஸ், ஸ்சாட் கெல்லி, ஆகியோர் 340 நாட்கள் விண்வெளி ஆய்வகத்தில் தங்கியிருந்தது சாதனையாக கருதப்பட்டது.

விண்வெளி ஆய்வகத்திற்கு 2 தடவை கமாண்டர் ஆக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை பெக்கி விட்சன் பெற்றுள்ளார்.
மேலும் விண்வெளி ஆய்வகம் சென்ற நாசா விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய ஒரே ஒரு பெண் வீரர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

விண்வெளி ஆய்வகத்தில் நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்த பெக்கி விட்சனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார்.

அவரது மகளும், ஆலோசகருமான இவாங்கா ட்ரம்பும் வாழ்த்து தெரிவித்தார். இது தனக்கு கிடைத்த கவுரவம் என பெக்கி விட்சன் பெருமிதம் அடைந்தார்.

இது 2030 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டிருக்கும் ‘நாசா’வின் முயற்சிக்கு இது முன்னோட்டம் என கூறியுள்ளார்.

விண்வெளி ஆய்வகத்தில் ரஷ்ய வீரர் ஜென்னடி படால்சா 879 நாட்கள் தங்கியிருந்து உலக சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.