பெற்றோரை கொடூரமாக தாக்கிய வெளியில் தள்ளி மகன் செய்த காரியம்
மகன் ஒருவர் வயோதிபர்களான தாய் மற்றும் தந்தையை கொடூரமாக தாக்கி அவர்களை வீட்டில் இருந்து வெளியே தள்ளிய சம்பவம் ஒன்று பண்டாரகம, ரேரெக்கான பிரதேசத்தில் நடந்துள்ளது.
இந்த சம்பவம் நடந்த போது அருகில் உள்ள வீடொன்றுக்கு வந்திருந்த இரண்டு பிக்குமார் சம்பவம் குறித்து பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமித் ஜயதிலக்கவுக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர். அப்போது சந்தேகநபர் தாயை சுவரில் தள்ளி கழுத்தை நெறித்து கொண்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பல காலமாக தனது தாய் மற்றும் தந்தையை தாக்கி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஒரு முறை தந்தையை கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியிருந்தாகவும் தெரியவந்துள்ளது.

பெற்றோரை தாக்கி பணத்தை பெற்றுக்கொள்ளும் சந்தேகநபர் நேற்றைய தினமும் பணத்தை கேட்டே பெற்றோரை தாக்கியுள்ளார்.
மகனை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் சம்பவங்கள் குறித்து தாம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவில்லை பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் திருமணம் முடிக்காத 36 வயதான நபர் என பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments