மும்பை அணியின் வெற்றிப் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக திகழுமா புனே?
தொடர் வெற்றிகளுடன் முதலிடத்திலுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிப் பயணத்திற்கு புனே சூப்பர் ஜெயன்ட் அணி முட்டுக்கட்டையாக திகழுமா என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய போட்டி நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகள் மோதும் ஐ.பி.எல். தொடரின் 28ஆவது போட்டி இன்று (திங்கட்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றியீட்டி, 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இந்த தொடரில் புனே அணிக்கு எதிரான போட்டியிலேயே மும்பை அணி தோல்வியை சந்தித்திருந்தது. புனேயில் நடந்த போட்டியில், புனே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்திருந்தது. இந்நிலையில், இந்த போட்டியிலும் புனே மும்பையை துவம்சம் செய்யும் என இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதேவேளை, புனேயுடனான தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் மும்பை வீரர்களும் மிகுந்த துடிப்புடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments