யாழ். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருக்கும் மக்கள்
யாழ். மாவட்டத்தில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே மாவட்டத்தில் உள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக யாழ். நகர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நேற்று நள்ளிரவு கொழும்பு நகரின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments