Header Ads

யாழிலிருந்து சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து அடியார்களுக்கு நேர்ந்த அவலம்

சிவனொளிபாத மலைக்குச் சென்ற இந்து பக்தர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து இந்து மதகுருமார்கள் உள்ளிட்ட சிவ பக்த அடியார்கள் இவ்வாறு சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுள்ளனர்.

கடந்த 22ம் திகதி இரவு சிவனொளிபாத மலை உச்சிக்கு அருகாமையில் வைத்து ஒரு தரப்பினர், குறித்த சிவ பக்தர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஓம் நமசிவாய என்னும் நாமத்தை உச்சரித்துக் கொண்டு சிவாய நம என்னும் கொடி ஏந்திக் கொண்டு மலை உச்சிக்கு ஏறியதாக யாத்திரைக்கு சென்ற மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பகுதியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொடிகளை ஏந்தி நமசிவாய என பிரார்த்ததனை செய்யக் கூடாது என சிலர் தம்மை அச்சுறுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தாம் இன, மத, மொழி பேதங்களை பாராட்டாத தரப்பினர் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதனை தவிர்க்க பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாத்திரை செய்த எமக்கு சில சிங்கள சகோதரர்கள் உணவு பானங்களை வழங்கி உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறான ஒர் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு எவ்வித முறைப்பாடு செய்யப்படவில்லை என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.