Header Ads

இவ்வளவு முக்கியத்துவமானவரா புவனேஷ் ? முரளி கூறியது என்ன தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் புவனேஸ்வர்குமார் முக்கியமானவர் என்று இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 வருடங்களாக தாம் அவரை அவதானித்து வருவதாகவும், தொடர்ந்து சிறந்த பந்துவீச்சை அவர் மேற்கொள்வதாகவும் முரளி கூறியுள்ளார்.

எனினும், துரதிஷ்டவசமாக அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.


இவ்வாறான நிலையில், புவனேஸ்வர்குமாருக்கு இந்திய அணியிலும் விரைவில் சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என்று தாம் நம்புவதாக முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் ரோயல் செலன்ஜர்ஸ பெங்களுர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.