Header Ads

மாணவர்களுக்கு ஆபத்து : பாடசாலைகளுக்கு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் அதிகமான வெப்ப காலநிலையில் மாணவர்களை பகல்வேளைகளில் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவேண்டாம் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாடசாலை அதிபர்களிடம் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்றைய தினம் கருத்து வெளியிட்டுள்ள கல்வி அமைச்சர்,

பாடசாலை நேரங்களில் மாணவர்கள் குடிக்கும் நீர், உட்பட்ட சுகாதார விடயங்கள் அதிபர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்

இதன் ஒருக்கட்டமாக பாடசாலைகளின் நீர் தாங்கிகளை அடிக்கடி கண்காணிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதன்மூலம் டெங்கு போன்ற நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.