வட கொரியாவுக்கு செக் வைக்கப்போகும் அமெரிக்கா....!
ஜப்பான் நாட்டின் ராணுவ தளத்தினை தாக்கும் நோக்கில் நேற்று ஒத்திகை நடத்தி வட கொரிய அரசு, அதனைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் அடுத்தகட்ட பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதனால், வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் (THAAD system) என்ற அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு கவன் நிறுவும் பணிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.
வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து (Terminal High Altitude Area Defence (THAAD) system) என்ற ஏவுகணை எதிர்ப்பு கவன் ஒன்றை அமைக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டது.
தற்போது, இந்த திட்டத்தினை விரைந்து முடிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.
இந்த கவனுக்கான பாகங்களை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் நேற்று தென் கொரியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் இருந்து ராணுவ சரக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த ஏவுகணை எதிர்ப்பு கவனுக்கான பாகங்கள் தென் கொரியா தலைநகர் சியோலில் இருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஓசான் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை வந்தடைந்தது.
இன்னும் ஒருசில நாட்களில் இந்த கவன் நிர்மாணிக்கப்படும். அதன் பின்னர் வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு தனது அதிரடி நடவடிக்கையின் மூலம் ‘செக்’ வைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, பசிபிக் பெருங்கடல் நாடுகளுக்கான அமெரிக்க ராணுவ தளபதி ஹாரி ஹாரிஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவை சீண்டிப் பார்த்து, சண்டைக்கு அழைக்கும் வட கொரியாவின் எரிச்சலூட்டும் செயல்கள் எல்லாம், இந்த எதிர்ப்பு கவன் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

No comments