டெல்லி போலீசார் முன்பு கண்ணீர் விட்டு கதறிய டிடிவி தினகரன்
டெல்லி போலீசார் முன்னிலையில் டிடிவி தினகரன் கண்ணீர்விட்டு அழுததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டெல்லியை சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரிடம், டிடிவி தினகரன் பணம் கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, 4 நாட்கள் அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர்
முதலில் அசட்டையாக பதிலளித்து வந்த தினகரன், ஆதாரங்களை போலீசார் அடுக்கியதும் வாய் திறக்க முடியாமல் மாட்டிக்கொண்டார்.
முதலில் அசட்டையாக பதிலளித்து வந்த தினகரன், ஆதாரங்களை போலீசார் அடுக்கியதும் வாய் திறக்க முடியாமல் மாட்டிக்கொண்டார்.
சுகேஷ் சந்திரசேகரையே தினகரன் முன்பாக கொண்டு வந்து நிறுத்தி கேள்விகளை போலீசார் எழுப்பியபோது திணறிவிட்டார்.
ஒருவழியாக நேற்று இரவு உண்மையை ஒப்புக்கொண்ட தினகரன் மாட்டிக்கொண்டோம் என நினைத்து கண்ணீர் சிந்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் நேற்று கைது செய்யப்பட்டார். அவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இருவருமே இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறைக்குள் சசிகலா அடைக்கப்படும் முன்பு அங்கு சென்ற அவரது கணவர் நடராஜனை பார்த்து, கதறி அழுந்தது நினைவிருக்கலாம்.
No comments