அதிரடியில் கலக்கும் மும்பாய் அணியின் நிதிஷ் ராணா பற்றி உங்களுக்கு தெரியுமா?
10 வது IPL தொடரின் மும்பாய் இந்தியன்ஸ் அணியின் முக்கிய வெற்றிகள் பலவற்றுக்கு காரணமாக இருக்கும் இளம் அதிரடி வீரர் நிதிஷ் ரானா பற்றியே அதிகமானவர்கள் பார்வை திரும்பியிருக்கிறது.
டெல்லியை சேர்ந்த 23 வயதான நிதிஷ் ரானா, IPL போட்டிகளில் 2015 ம் ஆண்டு இடம்பெற்ற ஏலத்தில் வெறுமனே 10 லட்சத்திற்கு மும்பாய் அணியில் இணைக்கப்பட்டார்.
அந்த பருவகாலத்தில் நிதிஷ் ரானா எந்தவொரு போட்டிகளிலும் விளையாடியிருக்கவில்லை, ஆயினும் 2016 ம் ஆண்டு இடம்பெற்ற IPL போட்டிகள் 4 போட்டிகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்கள் குவித்திருந்தார்.
ஆனால் இம்முறை IPL போட்டிகளில், மும்பாய் இந்தியன்ஸ் அணி இதுவரை பங்கெடுத்துள்ள 6 போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்றுள்ளது, குறித்த அத்தனை போட்டிகளிலும் இவரது பங்களிப்பு மிகப்பெரியளவில் காணப்பட்டது.
இவர் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 255 ஓட்டங்கள் குவித்துள்ளார், இதிலே 16 சிக்ஸர்களும், 14 பவுண்டரிகளும் உள்ளடக்கம்.

இந்தாண்டு IPL தொடரில் அதிகமான ஓட்டங்கள் குவித்தவருக்கான செம்மஞ்சள் நிறத்தொப்பியையும் நிதிஷ் ராணா தனதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோடிகள் கொட்டி IPL ஏலத்தில் பெறப்பட்ட பல வீரர்களால், தாங்கள் சார்ந்த IPL அணிக்கு ஒன்றும் செய்ய முடியாதிருக்கும் போது, மும்பாய் இந்தியன்ஸ் அணியினர் வெறுமென 10 லட்சம் செலவு செய்து அணிக்குள் இணைத்த வீரரை வைத்து இம்முறை IPL மகுடம் சூடினாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை எனலாம்.

No comments