ஏ.பி.சக்திவேல் கைது! மெராயா நகரத்தில் பதற்றம்
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி .சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை தாக்கி குற்றச்சாட்டில் லிந்துலை காவற்துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்கப்பட்டுள்ளவர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலின் வீட்டிற்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வாழ்த்து விளம்பர பலகையை இன்று காலை குறித்த நபர் தாக்கி உடைத்துள்ளதாக எழுந்த பிரச்சினையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அவரை கைது செய்யும்படி மக்கள் கோஷமிட்டுள்ளனர்.
எனினும் பின்னர் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் வீதியில் அமர்ந்தவாறு இருந்துள்ள நிலையில், பின்னர் லிந்துலை காவற்துறையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லிந்துலை, மெரயாவில் முச்சக்கர வண்டி சாரதியை தாக்கியக் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.பி.சக்திவேலை, 5,000 ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு, நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் இந்திக ரூவான் டி சில்வா, நேற்று உத்தரவிட்டார். இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

No comments