Header Ads

டொன் பிரட்மனின் சாதனையை மயிரழையில் தவறவிட்ட சங்கா


சாதனை நாயகன் சங்ககாரா தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் சாதிக்கும் ஒருவராக தன் பெயரை பதித்து வருகின்றார்.கிரிக்கெட்டின் கடுவுளாக கணிக்கப்படும் டான் பிரட்மனின் அரிய உலக சாதனை ஒன்றை சங்கா மயிரிழையில் இன்று தவறவிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தாலும், இங்கிலாந்தின் பிராந்திய அணியான சர்ரே அணிக்காக போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடி வருகின்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை(26) ஆரம்பமான எஸ்ஸெக்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய சர்ரே அணி, சங்காவின் அசத்தல் இரட்டை சதத்தின் துணையுடன் 369 ஓட்டங்கள் குவித்தது.

சங்கா முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட இந்த சதம் அவரது 61 வது முதல்தர போட்டி சதமாகும், அத்தோடு தொடர்ச்சியான 5 வது சதம் என்பது மட்டுமல்லாது,மொத்தத்தில் அவர் விளையாடிய இறுதி 7 இன்னிக்ஸில் 6 சதம் பெற்று தனது துடுப்பாட்ட பலத்தை நிரூபித்துள்ளார்.

முதல்தரப் போட்டிகளில் டொன் ப்ராட்மான் தொடர்ச்சியாக 6 சதம் பெற்று முதல்நிலையில் உள்ளபோது, தொடர்ச்சியான 5 சதம் பெற்றவர்களாக பிரைன் லாரா, பார்த்திப பட்டேல்,மைக் ஹஸ்ஸி,எவெர்ட்டன் விக்ஸ் வரிசையில் சங்ககாராவும் கடந்த வெள்ளிக்கிழமை(26 ) இணைந்துகொண்டார்.

இந்த நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சரித்திரப்பூர்வ சாதனையாக கருதப்படும் ப்ராட்மான் சாதனையை(தொடர்ச்சியான 6 சதம்) சங்கா இன்று சமன் செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த வேளையில், சற்றுமுன்னர் 86 ஓட்டங்களுடன் சங்கா ஆட்டம் இழந்துள்ளமை அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

ஒருநாள் போட்டிகளில் 2015 ம் ஆண்டில் தொடர்ச்சியான 4 சதம் பெற்று உலக சாதனை படைத்து ஓய்வை அறிவித்தது போன்று, முதல்தரப் போட்டிகளிலும் அண்மையில் ஓய்வு பெறும் முடிவை சங்கா அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.