Header Ads

லண்டன் நீதிபதியாக இந்திய பெண் வம்சாவளி நியமனம்...!

லண்டன் நீதிமன்றத்தில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அனுஜா ரவீந்திரா நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள டன்டி நகரில் பிறந்தவர் அனுஜா ரவீந்திரா திர். இந்திய வம்சாவளியான இவர் டன்டி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 

பின்னர் 1989-ஆம் ஆண்டு இவருக்கு கல்வி உதவித்தொகையுடன் நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 

சுமார் 23 ஆண்டுகள் அரசு வழக்கறிஞர் மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞராக இவர் பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் லண்டன் நகரில் உள்ள ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தின் நீதிபதியாக அனுஜா ரவீந்திரா திர் நியமிக்கப்பட்டுள்ளார். 

இதன் மூலம் லண்டன் நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

No comments

Powered by Blogger.