Header Ads

2025ம் ஆண்டு வரை தேசிய அரசாங்கம் நீடிக்குமா? மக்கள் ஆணை வழங்குவார்களா?


இலங்கையில் நடைமுறையில் உள்ள தேசிய அரசாங்கத்தின் பதவிக்காலம் மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கான முன்னெடுப்புகள் அரசியல் பின்புலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் .ஜெயவர்த்தன நடத்தியதை போன்று சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி ஆட்சிக்காலத்தை 2025ஆம் ஆண்டு வரை நீடித்துக்கொள்ளும் யோசனையும் தீவிரமாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் பெற்றக்கடனை திருப்பி செலுத்த தற்போது முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இன்னும் மூன்று வருடக்காலப்பகுதியில் அதனை நிறைவு செய்ய முடியாது.

இந்த கடன் செலுத்தல் காரணமாக அபிவிருத்தி திட்டங்களிலும் பாரிய தடங்கல்கள் உணரப்படுகின்றன.

எனவே கடனையும் செலுத்தி நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு மேலதிக காலம் தேவைப்படுகிறது.

இந்தநிலையில் தேர்தல் ஒன்றுக்கு செல்லும்போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் மத்தியில் உள்ள ஆதரவு இன்னும் கிராம மட்டத்தில் குறையவில்லை என்ற போக்கை உணர முடியும்.

எனவே அவரின் தலைதூக்கலை கட்டுப்படுத்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி ஆட்சியை நீடிப்பதே சிறந்தவழி என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னெடுப்புக்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் தரப்பில் ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் மேற்கொள்ளப்படுவதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.