Header Ads

யாழ் வடமராட்சி வீதி எங்கும் கோழிக்குஞ்சுகள்!! ஓடி.. ஓடி.. பொறுக்கும் மக்கள்…

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை வெளி பகுதியில் வியாபாரத்திற்காக கோழிக்குஞ்சுகளை ஏற்றி சென்ற பிக்கப் வாகனத்திலிருந்து கோழிக்குஞ்சுகள் சிதறி வீதியில் இறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (12) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வாகனத்திலிருந்த, கால் பகுதி அளவிலான கோழிக்குஞ்சுகள் வீதியில் சிதறுண்டு இறந்து கிடந்தன.

இதேவேளை இவ்வாறு வீதியில் சிதறி உயிருடன் காணப்பட்ட கோழிக்குஞ்சுகள், வீதியில் சென்ற பொதுமக்களால் சேகரிக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

முறையாக வைக்கப்படாமையினால் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் சுமார் 200 முதல் 300 வரையான கோழிக்குஞ்சுகள் இறந்ததுடன் 1200 இற்கும் அதிகமான கோழிக்குஞ்சுகள் வீதியால் பயணம் செய்தவர்களால் காப்பாற்றப்பட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது.

மேலும் இவ்வாறாக கவனக்குறைவுடன் கோழிக்குஞ்சுகளை ஏற்றி சென்றவரிடம் பொதுமக்கள் குறைபட்டு கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.


No comments

Powered by Blogger.