Header Ads

டோனி தலைமையில் ஐபிஎல் அணி அறிவிப்பு..!


10 வது IPL தொடர் இடம்பெற்றுவரும் நிலையில், இதுவரை IPL போட்டிகளில் விளையாடிய வீரர்களை வைத்து ஒரு IPL அணி உருவாக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு IPL கிண்ணம் வெற்றிகொண்டு கொடுத்தவரும், ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழல் பந்து வீச்சாளருமான ஷான் வோர்ன் இந்த அணியை தேர்வு செய்துள்ளார்.

இந்த அணியின் தலைவராக டோனி அறிவிக்கப்பட்டுள்ளார். அணியில் 4 வெளிநாடு வீரர்களாக கெயில், மக்கலம்,ஜாக்ஸ் கல்லிஸ்,லசித் மலிங்க ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஆயினும் IPL போட்டிகளில் அதிக ஓட்டம் குவித்தவராக திகழும் சுரேஷ் ரெய்னா இடம்பெறவில்லை.

அணி விபரம் : கிரிஸ் கெயில், ப்ரெண்டன் மக்கலம், ஜாக்ஸ் கல்லிஸ், விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், டோனி (தலைவர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், லசித் மலிங்க, உமேஷ் யாதவ்

No comments

Powered by Blogger.