வடக்கு கிழக்கு படிப்பில் வீழ்ச்சி..! எத்தனையாவது இடம் தெரியுமா?
2016ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் முதல் 25 இடங்களை பிடித்த கல்வி வலயங்களின் பட்டியலை கல்வி திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 84.70 வீத தேர்ச்சியுடன் வலஸ்முல்ல கல்வி வலயம் முதலாம் இடத்திலும், 82.79 வீத தேர்ச்சியுடன் கண்டி கல்வி வலயம் இரண்டாம் இடத்தையும், 79.74 வீத தேர்ச்சியுடன் முலட்டியான கல்வி வலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் முதல் 25 இடங்களில் வடக்கில் உள்ள எந்தவொரு கல்வி வலயங்களும் இடம்பெறவில்லை. எனினும், கிழக்கு மாகாணத்தின் இரண்டு கல்வி வலயங்கள் இடம்பிடித்துள்ளன.
அதன்படி, 71.90 வீத தேர்ச்சியுடன், அக்கரைப்பற்று கல்வி வலயம் 24வது இடத்திலும், 71.86 வீத தேர்ச்சியுடன் கல்முனை கல்வி வலயம் 25வது இடத்தையும் பெற்றுள்ளன.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையிலும், வட மாகாணத்தின் எந்தவொரு கல்வி வலயமும் முதல் 25 இடங்களில் இடம்பெறவில்லை.
மேலும், 2015ஆம் ஆண்டு முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம் 7வது இடத்தையும், அக்கரைப்பற்று கல்வி வலயம் 11வது இடத்தையும், கல்முனை வலயம் 17வது இடத்தையும் பெற்றிருந்தன.
எனினும், 2016ஆம் ஆண்டு முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாண கல்வி வலயங்களும் பின்னடைவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments