Header Ads

வரலாற்றிலேயே முதன்முறையாக இலங்கைக்கு கிடைத்த வெற்றி

மலேரியா அற்ற நாடாக 4ஆவது முறையாகவும் இலங்கை தெரிவாகி உள்ளது. இது வரலாற்றிலேயே முதன்முறை என்றும், சுகாதார மற்றும் இலங்கையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் வெற்றி என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தும் மலேரியா நோய் குறித்து விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கருத்தரங்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் கொழும்பில் இன்று காலை நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயத்தை சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதில், மலேரியா நோயின் பின்னணி, உலகளாவிய ரீதியிலும், இலங்கையிலும் தற்போது மலேரியா நோய் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு மலேரியா நோயுடன் வரும் பயணிகளும், இலங்கையிலிருந்து மலேரியா நோயுடன் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளும் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மலேரியா என்பது மனித குலத்தின் அழிவுகரமான நோய்களில் ஒன்றாக காணப்படுகின்றது. ஒரு பெண் நுளம்பு கடிப்பதால் ஒருவருக்கு ஒருவர் இந்த நோய் கடத்தப்படுகின்றது.

1934 - 1935 காலப்பகுதியில் 80,000 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அக்காலப்பகுதியில் மலேரியா பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தது.

எனினும்,மலேரியா அற்ற நாடுகளின் பட்டியலில் 4ஆவது முறையாகவும் இடம்பிடித்துள்ள இலங்கைக்கு வரலாற்றிலேயே முதன்முறை சுகாதார மற்றும் நாட்டின் வளர்ச்சியில் கிடைத்த வெற்றி என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.