விஜய் ஃபேன்ஸ் கொஞ்சம் கவனிங்கபா...! முக்கியமான தகவல்
இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓவ்வொரு பண்டிகையின் போது ஏதாவது ஸ்பெஷல் கொண்டாட்டம் வந்துவிடுகிறது.
தமிழ் புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு நாளே இடையில் இருக்கும் நிலையில் கடந்த வருடம் தமிழ் புத்தாண்டுக்காக தெறி படத்தை சென்னையில் உள்ள முக்கிய தியேட்டர் ஒன்று மீண்டும் திரையிட முடிவு செய்தள்ளது.
இந்த தகவலை நமது தளத்தில் முன்பே கூறியிருந்தோம். காலை 8 மணி காட்சிக்கு மட்டுமே ஒரு ஷோ என திட்டம் போட்டிருந்தார்கள்.
தற்போது ரசிகர்களின் வேண்டுகோள், மற்றும் அதிக டிக்கெட் தேவையாக இருப்பதால் அதே நாளில் இன்னும் 2 ஷோக்களை திரையிட புது பிளான் போட்டுள்ளார்களாம்.
ஆக ஒன்று மூன்றாகியுள்ளது. நாள் முழுக்க கொண்டாட்டம் தானே உங்களுக்கு...
No comments