Header Ads

ஒரு ஆண் ஹாட்டானவர் அல்லது பழம் என்பதை பெண்கள் எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரியுமா??

பெரும்பாலும் ஆண்கள் எப்படி பெண்களை கணக்கிடுகிறார்கள் என்று தான் நீங்கள் அறிந்திருப்பீர்கள், படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால், ஒரு ஆண்மகன் ஹாட்டா, நாட்டா (Hot or Not) என பெண்களும் கணக்கிடுகிறார்கள்.

அவற்றை பல வகையாக பிரித்து மேய்ந்து அலாசுகிறார்கள். எடுத்துக்காட்டாக ஒரு ஆண் நடந்து வரும் தோரணை, பார்க்கும் பார்வை, பழகும் விதம், பேச்சுவழக்கு என இந்த பட்டியல் நீள்கிறது...

உடை!
ஃபார்மலோ, கேசுவலோ... குண்டோ, ஒல்லியோ... உடையை நன்கு நீட்டாக பக்காவாக உடுத்தும் ஆண்கள் ஹாட்டாம்

ஸ்டைல்!
ஹேர் கட், தாடி வெவ்வேறு விதமாக வைக்கும் பலரும் அதை 100% பக்காவாக வைத்துக் கொள்ள மாற்றார்கள். அரைகுறையாக தான் பின்பற்றுவர்கள். ஸ்டைல்களை கச்சிதமாக பராமரிக்கும் ஆண்கள் ஹாட்டாம்.

பேச்சு!
ஒரு ஆண்மகனை பேசும் விதத்தை வைத்துக் கூட அவர் ஹாட்டா, நாட்டா என்று பெண்கள் கணக்கிடுகிறார்கள். மொக்கை போடாமல், வளவளவென நீட்டித்து பேசாமல், ஷார்ட் அன்ட் க்ரிஸ்பியாக பேசும் ஆண்கள் ஹாட்டாம்.

நடத்தை!

ஒரு செயலை செயல்படுத்துவதில் இருந்தும், ஒரு நபருடன் பழகுவது வரை என எதிலும் தனித்துவமாக திகழும் ஆண்கள் ஹாட்டானவர்களாம்.

வேலை!

மாடலிங், நடிப்பு, டான்ஸர் என குறிப்பிட்ட வேலை செய்யும் ஆண்கள் அதிகம் ஹாட்டாக தான் இருப்பார்கள் என்ற கருத்தும் பெண்கள் மத்தியில் நிலவுகிறது.
உடற்கட்டு!
சிக்ஸ் பேக் பாடி தான் என்றில்லை, தன் உடற்கட்டுக்கு ஏற்ப, ஏற்ற உடை உடுத்துவது, ஸ்டைல் செய்வது என கச்சிதமாக, எதையும் பொருத்தமாக செய்யும் ஆண்கள் ஹாட்டானவர்களாம்.
தோரணை!
உட்கார்வதில் இருந்து, நடப்பது வரை, நடந்து வந்து டக்கென நிற்பதில் இருந்து தலையை திருப்புவது, சிரிப்பது, ஷார்ப்பாக பார்ப்பது என ஒரு ஆணின் தோரணையில் சில விஷயங்களை வைத்தும் அவர்கள் ஹாட்டா, நாட்டா என கணக்கிடுகிறார்கள் பெண்கள்.

No comments

Powered by Blogger.