Header Ads

யாழில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் திறக்கப்படும் வீதி

கடந்த 30 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த காங்கேசன்துறை தொண்டைமானாறு பகுதிக்கு இடையிலான வீதியை மீள திறப்பதற்கு இராணுவம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போது இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது வலிகாமம் வடக்கில் மயிலிட்டிச் சந்தியை அண்மித்துள்ள பகுதியில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கேப்பாபுலவில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 189 ஏக்கர் காணிகளை எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் விடுவிக்க உள்ளதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் காங்கேசன்துறை தொண்டைமானாறு பகுதிக்கு இடையிலான வீதி மூடப்பட்டிருந்தது.

இதேவேளை, இந்த சந்திப்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.