Header Ads

பிள்ளை பிறப்பதற்கு முன்னார் ஜாதகம் பார்த்து பயனில்லை! மஹிந்த ஆதங்கம்


வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த யோசனைகளும் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமைக்கு காரணம் அரசாங்கத்திற்கு ஆதரவு என கூறமுடியாது, அரசாங்கத்திற்கு எந்த விதத்திலும் ஆதரவளிக்க போவதில்லை. வரவு செலவுத்திட்டத்தின் எந்த வாக்கெடுப்பின் போதும் கலந்து கொள்ளப் போவதில்லை என தீர்மானித்துள்ளேன் என்று கூறினார்.

மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தாமரை மொட்டு சின்ன கட்சிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் செல்ல போவதாக கூறுகின்றனர். அந்த கட்சியின் தலைவர் பதவியை நீங்கள் ஏற்பீர்களா? என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச,

அப்படியான தீர்மானம் ஒன்றை இன்னும் எடுக்கவில்லை. கூட்டு எதிர்க்கட்சிக்கு நான் தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றேன். கூட்டு எதிர்க்கட்சியினர் புதிய கட்சியில் இணையுமாறு என்னிடம் கோரிக்கைகளை விடுத்துள்ளனர் என்றார்.

புதிய கட்சியின் தலைவர் நீங்களா? அல்லது பசில் ராஜபக்சவா? என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி,

பசில் ராஜபக்ச தலைவர் இல்லை. எனக்கும் இன்னும் அழைப்பு கிடைக்கவில்லை. பலவந்தமாக என்னை தலைவராக்குவதாக கூறியுள்ளார். அப்படி செய்தால் பார்ப்போம். பிள்ளை பிறப்பதற்கு முன்னார் ஜாதகம் பார்த்து பயனில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.