Header Ads

தமிழ் மக்களுக்கு முழு உரிமைகளையும் வழங்கப்படும்


சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்க கூடிய முழுஉரிமைகளையும் வழங்குவோம் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜிதசேனரட்ன தெரிவித்தார்.

மாமனிதர் நடராஜா ரவிராஜின் 10வது ஆண்டு முன்னிட்டு, யாழ்.சாவகச்சேரி பகுதியில் அவரதுஉருவச்சிலை திறப்பு விழா மற்றும் நினைவுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை(20.11)நடைபெற்றது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ரவிராஜ் எனது நல்ல நண்பன். தென்னிலங்கைமக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை அவர்களுக்கு விளங்க கூடிய வகையில் தெரிவித்துவந்தார்.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்று மிதவான போக்குடன் செயற்பட்டஅவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டார்.

சிங்கள மக்களும் அவரைப்புரிந்து கொண்டிருந்தார்கள். தீவிரவாத அமைப்புக்களுடன் அவர் தொடர்பினைக்கொண்டிருக்கவில்லை.

தென்னிலங்கை மக்களுக்கு வடமக்களின் பிரச்சினைகளை சொல்வதில்அக்கறை கொண்டிருந்தார்.

தென்னிலங்கையில் இருந்த வந்த அரசியல்வாதிகளில், நான் சிறுபான்மை இனங்களின்உரிமைகளில் கவனமாக இருந்துள்ளேன்.

அமரர் ரவிராஜ் அவர்கள் சிங்கள பிரதேசத்திலும் செல்வாக்குடையவராக திகழ்ந்தார்.

ரவிராஜ் பேசும் சிங்களத்தினை சிங்கள மக்கள் ரசித்தார். அவர் பேசுவதில் அக்கறையாகஇருந்தார்கள்.

அவர்; ஒரு இனவாதிஅல்ல.தமிழ் மக்களின் சமவுரிமைக்காக போராடிக்கொண்டிருந்தார்.

நாங்களும் அவ்வாறான ஒருநிலமையினை ஏற்படுத்துவதற்காக சம்பந்தன் மற்றும் சுமந்திரனும், எம்முடன் இணைந்துசெயற்படுகின்றார்கள்.

ரவிராஜ் மற்றும் யோசப் பரராஜசிங்கம் பற்றியும் முன்னை நாள் ஜனாதிபதிமகிந்தராஜபக்சவுடன் பேசியிருக்கின்றேன்.

ரவிராஜ் உயிருடன் இருந்திருந்தால்,இனப்பிரச்சினையினை தீர்ப்பதற்கு மிதவாதமின்றி பல வழிகளில் செயற்பட்டிருப்பார்.

இவற்றினைப் பற்றி எனக்குப் புரிகின்றது. ஆனால், இராணுவத்தினருக்குப் புரிவதில்லைஎன்றார்.

மா மனிதர் ரவிராஜ் உயிருடன் இருந்திருந்தால், இன்னும் பல விடயங்களை அடைந்திருக்கமுடிந்திருக்கும். அவர் இல்லாத படியினால் பல விடயங்களை இழந்து கொண்டிருக்கின்றோம்.

விக்கிரமபாகு கருணாரட்ண மற்றும் நானும் அமைதியான இலங்கையினைக் காணவேண்டுமென்பதற்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றோம்.

இன்பபிரச்சினையினைதீர்ப்பதற்காக 6 பேர் கொண்ட குழுக்களாக செயற்படவுள்ளன.

அந்த குழுவின் அறிக்கையினைசெயற்படுத்துவதற்கு பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

1988 ஆம் இந்த நிலமையினை சந்தித்தோம். அன்று இருந்த சிங்கள இனவாதிகள் போன்றுஇன்றும் தீவிரவாத போக்குடையவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

அதனால்நாம் சில விடயங்களை செய்வதில் மெதுவாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

அமரர் ரவிராஜ் என்ன நோக்கத்திற்காக பாடுபட்டாரே அதே லட்சியத்தினை அடைவோம்.

இந்த நாட்டின் இனப்பிரச்சினையை புதிய அரசியலமைப்பின் மூலம் தீர்த்து வைப்போம்.

அப்போது, ரவிராஜ் மீண்டும் பிறந்து எம்மோடு இருப்பார்.

சிங்கள மக்கள் அனுபவிக்கும்அனைத்து உரிமைகளையும் தமிழ் மக்களும் அனுபவிக்க நாம் முழு உரிமைகளையும் வழங்குவோம்என்றார்.

No comments

Powered by Blogger.