Header Ads

ஜனாதிபதி செய்தது சரியா? நீதித்துறையை விமர்சித்தமைக்கு தண்டனை இல்லையா


மனித உரிமைகள் பற்றியும், வடக்கு கிழக்கின் மக்களின் குறைகள் பற்றியும் பா.உறுப்பினர் சிறிதரன் பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (19) இடம்பெற்ற விவாதத்தின் போதே இதை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்குள் பிரவேசித்த பாடசாலை மாணவனுக்கு நினைத்தும் பார்க்க முடியாத அளவிற்கு பரிசு ஒன்றை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இப்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்தது சரியா? என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனித உரிமைகள் பற்றியும், வடக்கு கிழக்கின் மக்களின் குறைகள் பற்றியும் பா.உறுப்பினர் சிறிதரன் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

ஊடகங்கள் நீதிபதிகளை விமர்சிக்கின்றன. யாழ் மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் மற்றும் வவுனியா மாவட்ட நீதிபதியை ஒரு இணையத்தளம் கடுமையாக விமர்சித்தது.

இதற்கு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, யாழ். நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதிபதி ஆனந்த ராஜா ஆகியோர் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்ட இணையதளத்தையும் சட்டம் ஏன் இதுவரைஎதுவும் செய்யவில்லை? சட்டம் அனைவருக்கும் சமமானது எனவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.