Header Ads

வங்கியில் திருட்டுத்தனமாக பணத்தை கொடுக்கும் ஊழியர்: கமெராவில் சிக்கிய பரபரப்பு


வடமாநிலத்தில் வங்கி ஊழியரிடம் ஒருவர் முறைகேடாக பணத்தை பெற்றுச் செல்வது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 8 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அதற்கு பதிலாக புதிய நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் ஏடிஎம்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தார்.

இதன் காரணமாக பணத்தை பெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் வங்கிகள் மற்றும் தபால்நிலையங்களில் வெகு நேரம் வரிசையில் நின்று பணத்தை பெற்றுச் செல்கின்றனர்.

இதில் ஒரு சில பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் மறைமுகமாக வங்கிகளுக்கு வந்து முறைகேடாக பணத்தை பெற்றுச் செல்வதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

அதே போல் வங்கியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு எந்த நிபந்தனையும் கிடையாது எனவும் கூறப்பட்டு வந்தது.

தற்போது அதை நிரூபிக்கும் வகையில், வட மாநிலத்தில் குறித்த நபர் ஒருவர் வங்கியின் பின் புறம் நிற்பதும், அதன் பின்னர் வங்கி ஊழியர் ஒருவர் அவருக்கு சிக்னல் கொடுத்த பின்பு, அவர் அந்த ஜன்னல் அருகே சென்று பணத்தை பெற்றுக் கொண்டு எதுவும் நடக்காதது போல் செல்வதும் போன்று வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

 மேலும் பொதுமக்கள் பலரும் பணம் பெறுவதற்காக வரிசையில் நின்று பணத்தை பெற்றுச் செல்லும் நிலையில், இவரின் செயல் பார்ப்போரை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments

Powered by Blogger.