Header Ads

ஆஜென்டீனா – கனடா வர்த்தக கூட்டமைப்பில் உரையாற்றும் பிரதமர்


ஆஜென்டீனாவுக்கு இரண்டுநாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று ஆஜென்டீனா – கனடா வர்த்தக கூட்டமைப்பில் உரையாற்றவுள்ளார்.

ஆஜென்டீனா – கனடா வர்த்தக கூட்டமைப்பில் இன்று வழங்கப்படவுள்ள மதிய போசன விருந்தளிப்புடன் கூடிய வரவேற்று நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள பிரதமர், ஆஜென்டீனாவினல் கனேடிய வர்த்தகங்கள் மேற்கொள்ளக்கூடிய முதலீடுகள் குறித்து கருத்துக்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனது பயணத்தின் முதல் நாளான நேற்று ஆஜென்டீன சனாதிபதியுடன் கலந்துரையாடல்களை மேறகொண்ட பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இருதரப்பு வர்த்தக முனைப்புக்கள் குறித்தும் விவாதித்துள்ளார்.

இதன் போது கனேடிய பொருட்களுக்கான ஆஜென்டீன சந்தையை மீளவும் திறந்து விடுதல், 3.000 சிரிய அகதிகளை மீள் குடியேற்றுவதற்கு ஆஜென்டீனாவுக்கு உதவுதல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

நேற்று இரவு ஆஜென்டீனாவி்ன் சனாதிபதி இல்லத்தில் வழங்கப்பட்ட இராப்போசன விருந்தில் கலந்துகொண்ட பின்னர் கருத்து வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இரண்டு நாட்டு மக்களும் முக்கியமான சவால்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறான நிலையில், பிரதமர் இன்று ஆற்றவுள்ள உரையின் போதும், பெரும்பாலும் இவ்வாறான விடயங்கள் உள்ளிட்ட வர்த்தக வாய்ப்புகள் குறித்தே கருத்து வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.