Header Ads

ஐ.நா பாதுகாப்பு மன்றத்தில் கனடா உறுப்புரிமை பெறுவதற்கு சேர்பியா ஆதரவு


ஐக்கிய நாடுகள் பாதுகாப்ப மன்றத்தில் தற்காலிக உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான முனைப்புகளில் கனடா ஈடுபட்டுள்ள நிலையில், அதனைக் கனடா பெற்றுக்கொள்வதற்கு தாம் ஆதரவளிப்பதாக சேர்பியா தெரிவித்துள்ளது.

2020ஆண்டுக்கு தேர்வாகவுள்ள ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பினர்கள் பட்டியலில் தன்னையும் இணைத்தக் கொள்ளும் பகீரத முயற்சியில் கனடா ஈடுபட்டுவரும் நிலையில், சேர்பியாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக அரசியலை நோக்கிய லிபரல் அரசாங்கத்தின் கொள்கை முன்னெடுப்புகளில், பாதுகாப்பு மன்ற உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதும் மிக முக்கிய இலக்காக கருதப்படும் நிலையில், சேர்பியா சிறிய நாடாக இருந்தாலும் அதன் இந்த ஆதரவு மிக முக்கிய விடயமாக கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி 17 ஆண்டுகளுக்கு முன்னர் கனடா சேர்பியாவுடன் போரில் ஈடுபட்ட நிலையில், தற்போது அந்த நாடு கனடாவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் திருப்பமாக நோக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.