Header Ads

மஹிந்த ஆட்சியில் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை! - 87 பேர் மீது தாக்குதல்


2006 ஜனவரி மாதம் தொடக்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான 9 ஆண்டுகளில், இலங்கையில் 10 தமிழ் ஊடகவியலாளர்கள் அடங்கலாக 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 87 ஊடகவியாலர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளனர் எனவும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல் ரத்நாயக்க சபையில் தகவல் வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, ஜே.வி.பியின் எம்.பியான நளிந்த ஜயதிஸ்ஸ, எழுப்பியிருந்த கேள்விகளுக்குப் திலளித்தபோதே சாகல ரத்நாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

இந்தக் காலப்பகுதியில் 13 ஊடகவியாலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 87 ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மேற்படி காலப்பகுதியில் ஐந்து ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.