Header Ads

விடுதலைப் புலிகளை தேடும் சிங்கள பாமர மக்கள்!!

குடிநீர் இன்றியும் யானைகளின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் வெலிக்கந்தையில் வாழும் 36 சிங்கள குடும்பங்கள் பாரிய சிரமமக்களுக்கு முகம்கொடுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த குடிநீர் மற்றும் யானை பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் அதிகாலை 3.00 மணியளவில் வந்த யானை வீட்டை உடைத்து சேதப்படுத்தியதுடன், இருவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார் .

இது தொடர்பாக வனவிலங்கு அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியதுடன் அவர்களுக்கு போதியளவு வாகன வசதிகளும் இல்லை என தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக இந்த பிரதேசவாசிகள் செய்கின்ற விவசாயம் அனைத்தும் யானைகளின் உணவுகளாக மாறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர் .

1லட்சம் ரூபாய் முதலீடு செய்து விவசாயம் செய்தால் 30 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கின்றது. இதை வைத்து 6 மாதங்கள் எவ்வாறு குடும்பம் நடத்துவது?

இந்த நிலையில் கடந்த காலங்களில் இருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலை தொடருமானால் எம்மால் உயிர் வாழ முடியாது என தெரிவித்துள்ளனர்.

ஒரு காலத்தில் இங்கு விடுதலைப் புலிகள் இருந்தனர். அப்போது இந்த யானைகள் இங்கு வருவதில்லை.

ஆனால் தற்போது யானைகளின் இடங்கள் சுவீகரிக்கப்படுவதனால் தான் இன்று யானைகள் கிராமத்துக்குள் வருகின்றன.

நாம் சாதாரண விவசாயிகள் என்பதால எமக்கு இந்த நிலை. தற்போதைய ஜனாதிபதி எமக்கு பக்கத்திலேயே இருக்கின்றார். ஆனால் எமக்கு இந்த நிலை உருவாகியுள்ளது என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


No comments

Powered by Blogger.