Header Ads

ரத்த வெள்ளத்துடன் தந்தையைத் தேடிய சிறுமி! உலகை உலுக்கிய வைரலாகும் வீடியோ

பெண் குழந்தைகள் இந்த உலகத்தின் தேவதைகள்; அவர்கள், ஒவ்வொரு வீட்டின் அடையாளங்கள்; பெண் குழந்தைகள் பாதுக்காப்பட வேண்டிய பொக்கிஷங்கள். ஆம், அவர்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 11-ம் தேதி உலக பெண் குழந்தைகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில்தான் போரில் காயமடைந்து தன் தந்தையைத் தேடும் ஒரு சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாவதுடன், நம் அனைவரின் மனதையும் பதறவைக்கிறது.

பொதுவாக பெண்கள் மீது நாம் எவ்வளவுதான் கோபம் கொண்டாலும், அவர்கள் அழும்போது நம்மால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியாது. அப்படியிருக்க, சின்னஞ்சிறு பெண் குழந்தை ஒன்று யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் ரத்தம் வெள்ளத்தில் துடிப்பதை நம்மால் எப்படிப் பார்க்க முடியும்? அப்படி ஒரு காட்சியை நாம் கண்டால் சத்தியமாக நம் கண்கள் குளமாகிவிடும். நம் கண்களைக் குளமாக்கி, இதயத்தைப் பிழித்தெடுக்கும் ஒரு சம்பவம் நேற்று சிரியாவில் நடந்துள்ளது.

சிரியாவில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்துவரும் சண்டை தீவிரம் அடைந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள், ஏதுமறியா குழந்தைகள் என பலர் இறந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கித் தோட்டாக்களால் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.

போராட்டக் குழுக்களைத் தோல்வியடையச் செய்யும்நோக்கில், சிரியா அரசு சமீபகாலமாக வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று (திங்கள்) அதிகாலை தல்பிஷே பகுதியில் சிரியா விமானப் படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில், பல அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில், ஒரு சிறுமி பலத்த காயங்களுடன் தலையில் ரத்தம் சொட்டச்சொட்ட மருத்துவமனையில் தஞ்சம் அடைந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் முதலுதவி செய்வதற்காக சென்றபோது, ‘‘என் தந்தை எங்கே? நான் என் அப்பாவிடம் செல்லவேண்டும்’’ என்று கதறுகிறார். முகத்தில் வழியும் ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே தனது தந்தையைக் கேட்டு அழும் அந்தக் குழந்தையைப் பார்ப்பவர் எவராலும் நிச்சயம் கண்ணீர் துளிவிடாமல் இருக்க முடியாது.

ஆயுதம் ஏந்தும் யுத்த நாடுகளே… இந்தக் குழந்தையின் கண் பார்வைக்கு நீங்கள் சொல்ல விரும்பும் பதில் என்ன?

No comments

Powered by Blogger.