Header Ads

யாழில் பிரபாகரனுக்காக சிறை சென்ற ஜேர்மன் பெண்!

மருதனார்மடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் படம் பொறித்த சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த பெண்ணொருவர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்த மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த இரகசிய கண்காணிப்பு கமெராக்களில் பதிவான காட்சிகளை வைத்து இவர் அடையாளம் காணப்பட்டதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

மருதனார்மடத்தில் உள்ள தங்கும் விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சுவரொட்டிகளை ஒட்டியது நானே தான் என கைதான பெண் பொலிஸாரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

விசாரணையில் தனது செயற்பாட்டை அவர் நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார் என பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படம் மற்றும் தமிழ்த் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் கடந்த திங்கட்கிழமை மருதனார்மடத்தில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையிலேயே இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை இன்று நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.