Header Ads

கோத்தா உட்பட இராணுவத்தினரை காப்பாற்றும் முயற்சியை ஜனாதிபதி கைவிடவேண்டும்


கோத்தபாய மற்றும் இராணுவத்தினரை காப்பாற்றும் முயற்சியில் ஜனாதிபதி செயற்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை வன்மையாக கண்டிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி, கோத்தபாய மற்றும் முன்னாள் கடற்படை தளபதிகளை விசாரணைக்கு அழைத்திருந்தமை தொடர்பில் தாம் கடும் அதிருப்தியடைவதாக நிகழ்வொன்றின் போது கூறியிருந்தார்.

இருப்பினும் ஜனாதிபதியின் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமே அன்றி, இதனை விடுத்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் கடற்படை தளபதிகள் மற்றும் இராணுவத்தினரை காப்பாற்றும் முயற்சியை ஜனாதிபதி கைவிட வேண்டு என அவர் மேலும் கூறியுள்ளார்.

பாரிய ஊழலில் ஈடுபட்டவர்களையும் குற்றமிழைத்தவர்களையும் பாதுகாப்பதற்காக மக்கள் கடந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை, எனினும் ஜனாதிபதி எதற்க்காக அவ்வாறான கருத்தை வெளியிட்டார் என்பதனை தெரிந்து கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் கடந்த மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற அநீதியான விடையங்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொள்ளவே தமிழ், முஸ்லீம் மக்கள் ஒன்றினைந்து வாக்களித்ததாகவும், இவ்வாறு மக்களின் நம்பிக்கையை வீணடிக்கும் வகையில் ஜனாதிபதி செயற்படக் கூடாதென மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.