Header Ads

சிறுமியை கற்பழித்து கொன்றவர் 23 ஆண்டுகளுக்கு பின் கைது

கனடா நாட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஓண்டாரியோ மாகாணத்தை சேர்ந்த கிறிஸ்ட்டின் ஹரோன்(அப்போதைய வயது 15) என்பவர் 1993-ஆண்டில் உயர் நிலைப்பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

ஹேனோவர் நகரில் வசித்து வந்த கிறிஸ்ட்டின் தினமும் ஒரு பூங்கா வழியாக பள்ளிக்கு சென்று வருவார்.

இந்நிலையில், இந்த பூங்காவிற்கு அருகில் அந்தோனி எட்வார்ட் ரிஞ்சல்(47) என்ற நபர் வசித்து வந்துள்ளார்.

மேலும், தினமும் பள்ளிக்கு செல்லும் கிறிஸ்ட்டினை எப்படியாவது அடைய வேண்டும் என எட்வார்ட் ரகசிய திட்டம் தீட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அதே ஆண்டு மே 18-ம் திகதி பள்ளியில் இருந்து திரும்பிய கிறிஸ்ட்டினை எட்வார்ட் அதிரடியாக கடத்தி அருகில் உள்ள ஓடைக்கு சென்றுள்ளார்.

பின்னர், கிறிஸ்ட்டினை ஓடையில் தூக்கி வீசியுள்ளார். தண்ணீரில் போராடி வெளியே வந்த சிறுமியை எட்வார்ட் கற்பழிக்க முயன்றுள்ளார்.

தண்ணீரில் வெகு நேரம் நீச்சல் அடித்த கலைப்பில் சிறுமியால் எட்வார்ட்டை தடுத்த நிறுத்த முடியவில்லை.

எட்வார்ட் கற்பழித்து முடித்த பிறகு ‘இச்சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது’ என மிரட்டியுள்ளார். சிறுமியும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால், சில நிமிடங்களுக்கு பிறகு எட்வார்ட்டின் மனம் மாறியுள்ளது. இருவரும் ஒரே நகரில் வசித்து வருவதால், சிறுமி எப்போதாவது தன்னை பொலிசாரிடம் சிக்க வைத்து விடுவார் என எட்வார்ட் அஞ்சியுள்ளார்.

இந்த எண்ணம் தோன்றிய உடனே சிறுமியை பிடித்து ஓடை நீரில் தள்ளி விட்டுள்ளார். பின்னர், தலையை வெளியே எடுக்க விட முடியாமல் மூச்சு அடைத்து கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் நடைபெற்ற பிறகு பள்ளிக்கு சென்றுவிட்டு கிறிஸ்ட்டின் வீடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்ற பொலிசாரால் கடந்த 23 ஆண்டுகளாக கிறிஸ்ட்டினின் சடலத்தையும், கொலையாளியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால், ரகசிய விசாரணை மட்டும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கிறிஸ்ட்டினை கற்பழித்து கொலை செய்த எட்வார்ட் தானாக முன் வந்து தனது குற்றத்தை பொலிசாரிடம் தெரிவித்துவிட்டு சரணடைந்துள்ளார்.

மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில் எட்வார்ட் பொலிசார் பாதுகாப்பில் அழைத்து வரப்பட்டு தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.