Living Together வாழ்கை வாழ்ந்த கல்லூரி மாணவி
திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த(Living Together) காதல் ஜோடியை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
கொல்லத்தை சேர்ந்த மாணவி(20) ஒருவர் அங்கிருக்கும் ஒரு கல்லூரியில் பிஏ ஆங்கிலம் இலக்கியம் படித்து வந்துள்ளார், படிப்பில் படுகெட்டிகாரியான இவர், அதே கல்லூரியை சேர்ந்த 19 வயது மாணவன் மீது காதல் கொண்டுள்ளார்.
இருவரும், நாளடைவில் ஒன்றாக சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளனர், இதனை அறிந்த பெற்றோர், பொலிசில் புகார் அளித்ததையடுத்து, மேஜர் இல்லை என்பதால் இருவரும் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் கல்லூரி நிர்வாகம் இருவரையும் சஸ்பெண்ட் செய்தது. கல்வியில் சிறந்து விழங்கும் மாணவி மன்னிப்பு கேட்டு, காதலில் விழுந்ததை தவிர வேறு எந்தஒரு தவறையும் நான்செய்யவில்லையே என்னை படிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.
அவரது கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுக்கவே உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
“காதலில் விழுவது என்பது வெற்று வழக்கு கிடையாது; இரு மாணவர்களும் ஓடிபோய், திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழவேண்டும் என்ற கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர்.
கல்வி நிறுவனங்களில் ஒழுக்கத்தை உறுதிசெய்ய வேண்டும் என்ற நிர்வாகத்தின் அக்கறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறி, மாணவியை சஸ்பெண்ட் செய்தது சரியானதே என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
No comments