Header Ads

தண்ணீருக்கு பதில் பீரை ஊற்றி குளித்து கும்மாளமடிக்கும் உலகின் முதல் நீச்சல் குளம்

ஆஸ்திரியா நாட்டில் தண்ணீருக்கு பதில் பீரை ஊற்றி குளித்து கும்மாளமடிக்கும் உலகின் முதல் நீச்சல் குளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரியா நாட்டில் பீர் மதுபானத்தை கொண்டு உலகிலேயே முதல் முதலாக ஒரு நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தண்ணீருக்கு பதில் பீரை ஊற்றி குளித்து அந்நாட்டு மக்கள் மகிழ்கின்றனர்.

ஒரு பெரிய சூடான தொட்டியில் பீரினை ஊற்றி குளிப்பதொடு மட்டும் அல்லாமல் குளியலுக்கு நடுவே பீர் அருந்தவும் செய்கின்றனர். மேலும் பீர் ஊற்றி குளிப்பதன் மூலம் உடல் சுருசுருப்படையும் என்றும் மேனி பளபளக்கும் எனவும் உங்கள் தோல் மிருதுவாகும் எனவும் நீச்சல் குள நிர்வாகிகள் விளம்பரம் செய்கிறார்கள்.


இதனால் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. மேலும் இதில் குளிக்க முன்கூட்டியே புக்கிங் செய்வது அவசியமாம். ஆஸ்திரியா வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் இங்கு செல்கிறார்களாம்.



No comments

Powered by Blogger.