Header Ads

உங்களை பெண்களுக்கு பிடிக்க இது இருந்த போதுமாம்



பெண்கள் யாரை விரும்புகிறார்கள் என பல காலம் ஜொள்ளு விட்டு அனுபவம் வாய்ந்தவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே;

1. தம்பி.. ஆண்கள்னா அவன் சிரிச்ச முகமா இருக்கணும். அப்பாவியா இருக்கணும் அப்பதான் பொண்ணுங்க கிட்டவே வருவாங்க...என ஒரே போடாக போட்டார்.

2. அப்பாவின்னாலும் கிறுக்கு பயலா இருக்க கூடாது. திறமையும் இருக்கணும்.அவந்தான் இதுக்கு சரிப்படுவான்னு மத்தவங்க சொல்ற மாதிரி நீ இருக்கணும். அது எந்த விசயம் வேணா இருக்கலாம்.

3. ஆளுக்கு தகுந்த எள்ளுருண்டை மாதிரி ஒவ்வொரு பொண்ணும் தன்னோட அறிவுக்கு தகுந்த மாதிரிதான் தன் காதலனை பிடிப்பா. கற்றோரை கற்றோரே காமுறுவர் நு திருவள்ளுவர் சொல்லியிருக்கார். அதாவது உனக்கு பெயிண்டிங்க்ஸ் பிடிக்கும்.அந்த பொண்ணுக்கும் அது பிடிக்கும்னா இரண்டு பேரும் ஈஸியா நட்புல விழுந்துடுவீங்க.. அந்த பெண்ணைவிட நீ அதுல நிறைய விசயம் உனக்கு தெரியும்னா அந்த பொண்ணு உன்னை அடிக்கடி தொந்தரவு பண்ணி நிறைய தெரிஞ்சிக்க ஆசைப்படும். அப்படியே டெவலப் ஆகும்.

4. அவர் ரொம்ப சூப்பரா பேசுவாரு.. அவர் பேசினா நான் என்னையே மறந்துடுவேன்னு அந்த பொண்ணு தன் தோழிகிட்ட சொல்ற அளவுக்கு உன் பேச்சு இனிமையா இருக்கணும்... கடி போடுறான்பானு தெறிச்சு ஓடுற மாதிரி அறுக்க கூடாது. சுத்தமா இருக்கணும். நீட்டா ஷேவ் பண்ணி, கிராப் வெச்சி, இன் பண்ணின சர்ட் போட்டு இருக்கணும். குளிகாம அழுக்கு ஜீன்ஸ் போட்டுகிட்டு பபுள்கம் போட்டுகிட்டு, தலைமுடியை ரொம்ப நாள் வெட்டாம, இருந்தா திரும்பி கூட பார்க்கிறதில்ல..

5. ஆபாசமா பேசினா பொண்ணுங்களுக்கு பிடிக்கும். அதுக்காக எடுத்தவுடனே அப்படி ஆரம்பிச்சா என்னை காப்பாத்துங்க.. ரேப் பண்ண பார்க்குரான்னு அலற ஆரம்பிச்சிடும். அந்த பெண்ணின் மனம் அறிந்து பேசு. அதுக்கு பிடிக்காதுன்னா விட்ரு. பல பெண்கள்கிட்டயும் வலிய வலிய போய் பேசினா ஜொள்ளுன்னு சொல்லிருவாங்க.. தேவைன்னா மட்டும் பேசு. அடிக்கடி பேசினா லூசுன்னு சொல்லிரும்.

6. மரியாதை ரொம்ப முக்கியம். மரியாதை கொடுத்தா பொண்ணுங்க அவங்ககிட்ட அதிக நேரம் செலவழிப்பாங்க.

7. நிறைய வம்புக்கதை, ஊர்க்கதை, சினிமாக்கதை சொல்ல தெரியணும்... மசாலாவா பேசணும். அவங்க உனக்கு ரொம்ப முக்கியம் மாதிரி நடந்துக்கணும். அதே சமயம் உன் படிப்பு, தொழில்லயும் சின்சியரா இருக்கணும். படிப்பை மறந்துட்டு என் கூட சுத்துறான். நம்மால இவன் படிப்பு கெடக்கூடாதுன்னு அந்த பொண்ணு நினைக்கும் அளவு சுத்தாதே.

8. அவங்க அப்பா, அம்மாகிட்டயும் நல்ல பேர் வாங்கணும்.அது ரொம்ப முக்கியம்.அதுதான் அவங்க அதிகம் எதிர்பார்ப்பது.

9. குழந்தைகள்னா ரொம்ப பிடிக்குமா..ஆமாம்னா நீ ரொம்ப நெருங்கிட்ட...

10. கண்களை பார்த்து பேசினா உடனே உங்களை முழுசா நம்புவாங்க.. அதுதான் சரியான பேச்சும் கூட... நல்ல தொழில், சம்பாதிக்கும் திறமை இருக்கும் ஆண்களை பெண்கள் இப்போ 40 சதவீதம் விரும்புறாங்க. அதுதான் உண்மையான பாதுகாப்புன்னு நினைக்கிறாங்க.

No comments

Powered by Blogger.