Header Ads

மைனா வாழ்க்கையில் விளையாடியது ஜோதிடமா..?


நோய், கடன், எதிரி, துன்பம், இன்பம் இந்த ஐந்துக்கும் உள்ள மதிப்பே வேறு. வாழ்க்கையில் இந்த ஐந்தையும் சந்திக்காதவர் ஒருவரும் இல்லை என்றே கூறலாம்.

இதற்கு விதிவிலக்காக பலரை கூறினாலும் தற்போதைய சூழலில் மைனா தான் சிறந்த எடுத்துக்காட்டு. இந்த பெயரை கேட்டதும் நம் நினைவுக்கு வருவது அண்மைகால சம்பவங்கள் தான்.

சின்னத்திரை நடிகை நந்தினியின் கணவர் கார்த்திகேயன் சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். இவரின் தற்கொலைக்கு நந்தினி உட்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

தற்போது புது கதை ஒன்று மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகின்றது. அதுதான் இந்த ஜோதிட சாஸ்திரங்கள். நந்தினியின் வாழ்க்கை மாற்றங்களுக்கு இதுவும் காரணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காதல் திருமணம் செய்யும் பெரும்பாலானவர்கள் விடும் தவறுகளில் இதுவும் ஒன்று. என்னதான் காசு, பணம் எமக்கு அதிகம் இருந்தாலும் கடவுள் அருள் இல்லை என்றால் எதுவும் இயலாது. கடவுள் மீது இருக்கும் பக்தி சாதாரண நிலைகளில் இருந்து வேறுபட்டது.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா ?என்ற விவாதங்களை தவிர்த்து கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் அதனால் அடையும் நன்மைகள் அதிகம்.

"நம்பினார் கெடுவதில்லை! நான்கு மறை தீர்ப்பு!" எனகிறது இந்துமதம், "நம்பிக்கை கொள்ளுங்கள் நலம் பெறுவீர்கள்!"என்கிறது கிறிஸ்தவம், எந்த அளவிற்கு இறைவனை நம்புகிறீர்களோ, அந்த அளவிற்கு அவன் அருள்புரிவான்" என்கிறது இஸ்லாம், எனவே கடவுள் நம்பிக்கையே பலரது மனக்காயங்களை ஆற்ற சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் கடவுள் நம்பிக்கையில் இருந்து விலகிவிட்டார்களா?... அல்லுத தற்போது ஏற்பட்டுள்ள ராசி மாற்றங்கள் தான் இவர்களின் இந்த நிலைக்கு காரணமா?... யாருக்குத் தெரியும்.

No comments

Powered by Blogger.