Header Ads

யாழ் வடமராட்சியில் நேற்­றி­ரவு பதற்­றம் - கலவரமான வீதி

யாழ். வடமராட்சி பகுதியில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்றைய தினம் பதற்ற நிலை உருவாகியது.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பே இந்த குழுமோதலுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துன்னாலை பகுதியில் இடப்பெற்ற இந்த மோதல் காரணமாக பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் இரவு வேலைகளிலும் ரோந்து பணி­யில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

சுமார் 500 க்கும் மேற்பட்ட கண்­ணா­டி­ போத்­தல்­கள், கற்­கள் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி இந்த இரு குழுக்களும் சில மணிநேரம் மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தக­வல் வழங்­கப்­பட்­டு பொலிஸார் குறித்த பகுதிக்கு செல்வதற்கு முன்னரே மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், அப்பகுதி முழுவதும் கண்­ணா­டி போத்­தல்­கள் உடைக்­கப்­பட்டு காணப்பட்டதுடன், அவற்றினை பொலி­ஸாரின் அறி­வு­றுத்­த­லில் நேற்­றி­ரவு சுத்தம் செய்­யும் பணி­களும் இடம்பெற்றன.

இருப்பினும் இந்த குழு மோதலில் படுகாயமுற்ற 7 பேர் மந்­திகை வைத்­தி­ய­சா­லை­யில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஒரு­வர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் சந்­தே­க­ந­பர்­களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.