Header Ads

கோஹ்லியின் ஆட்டமிழப்பு : அரங்கிற்கு திரும்பிய பின் நடந்தது என்ன?

ஐ.பி.எல்.தொடரின் நேற்றைய கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் பெங்களூர் அணி 49 ஓட்டங்களுக்கு சுருண்டு படுதோல்வியடைந்தது.

இந்த போட்டியில் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஓட்டங்கள் எதுவும் பெறாமல் “டக்கவுட்” ஆனார்.

ஆட்டமிழந்த விராட் கோஹ்லி மிகவும் ஆத்திரமடைந்த நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதன் பிறகு பெங்களூர் அணியின் அனைத்து விக்கட்டுகளும் 49 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

இந்நிலையில் போட்டியில் ஆட்டமிழந்ததற்கான காரணம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


மைதானத்தில் துடுப்பாட்ட வீரர்கள் பந்துகளை எந்தவித இடையூறுகளுமின்றி பார்வையிடுவதற்கு கறுப்பு நிறத்திலான திரைகள் மைதானத்தின் இரண்டு பக்கங்களில் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்நிலையில் விராட் கோஹ்லி துடுப்பெடுத்தாடும் போது குறித்த திரை பகுதியில் இடையூறு ஏற்படுவதாக நடுவர்களுக்கு அறிவித்துள்ளார். எனினும் குறித்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தாமதமாகியுள்ளது.

இதனால் விராட் கோஹ்லி முதல் பந்தில் ஆட்டமிழந்து மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்.


அதன்பிறகு கெயிலும் குறித்த திரையில் இடையூறு இருப்பதாக அறிவித்ததையடுத்து பொலிஸ் அதிகாரி ஒருவரின் மூலம் குறித்த இடையூறு 2 பந்துகளுக்கு பிறகு நிவர்த்திசெய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த இடையூறுக்கு உடனடியாக தீர்வை பெற்று தர முடியாததினால் விராட் கோஹ்லி கோபத்துடன் நான்காவது நடுவரிடம் முறையிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.