கலக்கும் மலிங்கா அணி! ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மும்பை தான் டாப்
ஐபில் போட்டிகளின் நடப்பு தொடரில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆறு வெற்றிகளுடன் மும்பை இண்டியன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஐபில் போட்டிகளின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியுடன் மும்பை இண்டியன்ஸ் அணி மோதியது.
முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 142 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியின் பட்லர் 28 ஓட்டங்களும், பொல்லார்ட் 26 ஓட்டங்களும் எடுத்தனர்.
அடுத்து களமிரங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 128 ஓட்டங்களே எடுக்க முடிந்தது.
இதனால் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
இது மும்பை அணி தொடர்ந்து பெறும் ஆறாவது வெற்றியாகும்.
இதன் மூலம் மும்பை அணி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ளது.
No comments