Header Ads

நோ பால் இல்லை..போல்டாகியும் வெளியேறாமல் இருந்த கம்மின்ஸ்: தலையில் கை வைத்து புலம்பிய பவுலர்


கொல்கத்தாவில், டெல்லிக்கு எதிரான போட்டியின் போது டெல்லி வீரர் கம்மின்ஸ் போல்டாகியும், பைஸ் கீழே விழாததால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஐபிஎல்-லில் இன்று நடந்த 18-வது போட்டியில் ஜாகிர்கான் தலைமையிலான டெல்லி டேர்டேவில்ஸ் அணியும், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

பரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், கடைசி ஓவரின் 5-வது பந்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் போது டெல்லி அணி வீரர் கம்மின்ஸ், கொல்கத்தா அணி வீரர் குல்டர் நைல் பந்து வீச்சை எதிர்கொண்டார்.

அப்போது அதை அவர் அடித்து ஆட முயற்சித்த போது, பந்தானது அவரை ஏமாற்றி போல்டில் பட்டுச் சென்றது. ஆனால் போல்டில் இருந்த பைசானது கீழே விழுந்தால் மட்டுமே அவுட் வழங்கப்படும், இல்லை எனில் அது அவுட் என்று ஏற்றுக் கொள்ளப்படமாட்டது.

அதே போன்று தான் கம்மின்சுக்கும் நடந்துள்ளது. போல்டில் பந்து பட்ட போதும், பைஸ் கீழே விழவில்லை இதனால் அவர் மீண்டும் துடுப்பேடுத்தாடினார். இதை கண்ட பந்துவீச்சாளர் குல்டர் நைல் கையில் தலைவைத்த படியே நின்றார்.


No comments

Powered by Blogger.