Header Ads

ட்ரம்பின் முடிவினால் இலங்கைக்கு வந்த புதிய சிக்கல்?

2018ஆம் ஆண்டிற்கான அமெரிக்க வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்தியடையும் நாடுகளுக்காக வழங்கப்படும் உதவி குறிப்பிடத்தக்க அளவு வெட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உள்ளக தகவல்களை அடிப்படையாக கொண்டு அவர்கள் இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவுக்கு முதன்மை இடத்தை வழங்கும் நோக்கில் ட்ரம்பின் அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்கா வழங்கும் உதவியில் 1/3 என்ற அளவில் குறைப்பதற்கு எதிர்வரும் காலங்களில் தீர்மானிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவினால் அபிவிருத்தி அடைந்துவரும் இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று சில பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

குறிப்பாக, அமெரிக்க அரசாங்க உதவியின் கீழ் 2001ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு உதவி கிடைக்கின்றது.


இந்நிலையில், அமெரிக்காவின் அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஏற்படும் மாற்றம், மேலும் இலங்கை போன்ற நாடுகளைப் பாதிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைகளால் உலக நாடுகள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்க நேரும் என அவர் ஆட்சிக்கு வந்த உடனேயே எதிர்வு கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.