Header Ads

இலங்கையரின் இயற்கைக்கான கண்டுபிடிப்பு! மூன்றே மாதங்களில் முற்றுப்புள்ளி!


குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய இயந்திரம் ஒன்றை கம்பளை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், குப்பை பிரச்சினை மேலும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய இயந்திரம் ஒன்றை கம்பளை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

கம்பளை தொலுவ பிரதேசத்தில் வசிக்கும், 37 வயதான விக்கும் சம்பத் என்ற நபர் கண்டுபிடித்துள்ள இந்த இயந்திரத்தின் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மீள்சுழற்சி செய்வதற்கு முடிந்துள்ளது.

இரும்பு, பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் கடதாசி போன்றவைகள் இந்த இயந்திரத்தின் ஊடாக வேறுபடுத்தி மீள் சுழற்சி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பகுதிகள் உர உற்பத்திகள் மற்றும் மூலப்பொருள் உற்பத்திகளும் பயன்படுத்தப்படுகின்றது. குப்பை மீள் சுழற்சி இயந்திர உற்பத்திக்காக 37 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக விக்கும் சம்பத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு குப்பை பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை 3 மாத காலத்திற்குள் தீர்த்து வைக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக அரசின் ஒத்துழைப்பையும் அவர் எதிர்ப்பார்த்துள்ளார்.

No comments

Powered by Blogger.