Header Ads

காணாமல் போன மலேசிய விமானம் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்


2014ல் காணாமல் போன மலேசியா விமானம் தேடப்பட்ட மண்டலத்தின் வட பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு சென்று கொண்டிருந்த எம்ஹெச்370 விமானம் திடீரென காணாமல் போனது.

மூன்று வருடங்களாக இந்த விமானத்தை தேடி வந்த நிலையில் கடந்த ஜனவரியில் தங்களுடைய தேடுதல் வேட்டையை நிறுத்தி கொள்வதாக அவுஸ்திரேலியா, மலேசியா மற்றும் சீனா நாடுகள் அறிவித்தன.

இதுகுறித்து வெகுகாலமாக ஆராய்ந்து வரும் அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், மலேசிய விமானத்தின் உடைந்த பகுதிகள் தேடப்பட்ட மண்டலத்தின் வட பகுதியில் விழுந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும், விமானத்தின் இறகு பகுதி நீரோட்டத்தால் அடித்து செல்லப்படும் மாதிரியை முதல்முறையாக ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள் கடந்த டிசம்பர் மாத அறிக்கையை தற்போது ஆதரித்துள்ளனர்.

விமானத்தின் இறகுப்பகுதி 20 டிகிரி இடதுப்புறமாக அதன் மாதிரியை விட வேகமாக செல்வதை தற்போது கண்டறிந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.