Header Ads

மீண்டும் சூறாவளியா? வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்...!


வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இந்த தாழமுக்கத்தினால் நாளை அது சூறாவளியாக மாறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இலங்கைக்கு கிழக்கே இருந்து, பங்களதேஷ் அல்லது மியன்மாரை நோக்கி சூறாவளி நகர்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாகவும், இதனால் தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேஷ் ஆகிய பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலையை எதிர்பார்க்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சூறாவளிக்கு மொரா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.