Header Ads

பயங்கரவாதம் குறித்து எந்த வேட்பாளர்களுக்கும் அக்கறை இல்லை! - மரீன் லூ பென் ஆவேச உரை!!


நேற்று புதன்கிழமை தேசிய முன்னணி வேட்பாளர் மரீன் லூ பென் தனது கடைசி சந்திப்பை மார்செய்யில் நிகழ்த்தினார்.

 'பயங்கரவாதம் குறித்து எந்த தேர்தல் வேட்பாளர்களுக்கும் அக்கறை இல்லை!' என குற்றஞ்சாட்டினார்.

Marseille இல், 5000 ஆதரவாளர்களுக்கு முன்னால் தனது முதல் சுற்றுக்கான கடைசி உரையை நிகழ்த்தினார் மரீன் லூ பென். 

அவர் தெரிவிக்கும் போது, 'இஸ்லாமிய தேச பயங்கரவாதம் எனும் விஷம் நாடு முழுவதும் பரவியுள்ளது.

இது குறித்து பேசுவதற்கு யாருமே தயார் இல்லை. அனைவரும் தூசியை சிவப்பு கம்பளத்துக்கு கீழே மறைக்கின்றனர். 

ஜனாதிபதி வேட்பாளர்களின் என்னைத் தவிர வேறு எவருமே இஸ்லாமிய தேச பயங்கரவாதம் குறித்து பேசவில்லை.

தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே இது குறித்த பல கேள்விகளை நான் எழுப்பியுள்ளேன்!' என மிக கோபமாக தனது உரையை நிகழ்த்தினார்.

தவிர, நாட்டில் அவசரகாலச் சட்டம் போடப்பட்டுடிருப்பதெல்லாம் கானல் நீர் போன்றது. 

ஒரு வருடமாக போடப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவில்லையா என்ன?!' என கேள்வியை எழுப்பியுள்ளார். 

'பயங்கரவாதம் குறித்து நான் ஒருவரே தனியாக கேள்வி எழுப்பி வருகிறேன்!' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.