Header Ads

தனி ஒருவனாக போராடிய ரெய்னா! கொல்கத்தாவை ஊதி தள்ளியது குஜராத்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

கொல்கத்தாவில் நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, துடுப்பாடிய கொல்கத்தா அணியின் வீரர்கள் காம்பீர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன், உத்தப்பா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக சுனில் நரேன் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 9 பவுண்டரியும், 1 சிக்சரும் அடங்கும்.

இதேபோல், காம்பீர் 33 ஓட்டங்களும் (28 பந்துகள் 2 பவுண்டரி, 1 சிக்சர்), உத்தப்பா 72 ஓட்டங்களும்(48 பந்துகள் 8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் பிரவீன் குமார், ஃபல்க்னர், தம்பி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க ஆட்டக்கரார்கள் மெக்கல்லம் மற்றும் பின்ச் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணி 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் ஆட்டம் தொடங்கியதும் அதிரடி ஆட்டக்காரர் மெக்கல்லம் 33 ஓட்டங்களிலும் (17 பந்துகள் 5 பவுண்டரி , 1 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 3 ஓட்டத்திலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த இஷான் கிஷான் 4, ஸ்மித் 5 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடனும், நிதானமாகவும் சுரேஷ் ரெய்னா விளையாடி ஓட்டங்களைசேர்த்தார். அவர் 84 ஓட்டங்கள் ( 46 பந்துகள் 9 பவுண்டரி 4 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை எடுத்து குஜராத் லயன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

No comments

Powered by Blogger.